இந்த சாகச நிகழ்ச்சியில் அப்தோ ஃபெகாலி, லிதுவேனியா ஸ்டண்ட் பைக்கர் அராஸ் கிபீசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இவர்களது சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கார், பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதால் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.