அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்!

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் பூரண குணமானார். 
 
நடைபெற்று முடிந்த சட்டசபைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை எனக் கூறப்பட்டது. அண்மையில் கூட மியாட் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இளைய மகன் சண்முக பாண்டியனுடன் அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்