தேர்தலில் முறைகேடு: வாக்குபதிவு நிறுத்தம்!

வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:24 IST)
தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் முறைக்கேடு நடந்துள்ளதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் பலர் ஆர்வமாக வந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் முறைகேடுகளும் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் 5 மற்றும் 6வது வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளில் ஏற்கனவே குறிப்பிட்ட சின்னத்தில் முத்திரை குத்தப்பட்டிருப்பதை கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி பலர் புகார் அளித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்