வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடிய ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி சேர வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி சமீபத்தில் அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த மாதிரி எந்த நோக்கமும் இல்லை. ஏற்கனவே குருமூர்த்தி என்னிடம் பல தடவை வாங்கி கட்டிக் கொண்டார். குருமூர்த்தி வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியை எடுத்த உறுதியான முடிவு," என்று தெரிவித்தார்.