பீர் பாட்டில் உள்ளே காலண்டர் காகிதம்.. குடிமகன்கள் அதிர்ச்சி..!
வெள்ளி, 23 ஜூன் 2023 (15:13 IST)
பீர் பாட்டில் உள்ளே காலண்டர் காகிதம் இருப்பதை பார்த்து குடிமகன் அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவம் புதுவை அருகே நடந்துள்ளது.
புதுச்சேரி கடலூர் எல்லையில் தனியார் மதுபான பார் உள்ளது. இங்கே இரண்டு பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு இருந்தது
இதனை அடுத்து கூலி தொழிலாளிகள் ஒருவர் மூன்று பீர்களை வாங்கினார். அதில் ஒரு பீரில் தினசரி காலண்டர் காகிதம் அதில் மிதந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர் கடைக்காரரிடம் பதில் கேட்டபோது சரியாக கூறவில்லை இதனை அடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.