கடந்த ஆண்டு இந்த துறையினுடைய அமைச்சர், சென்னையின் மேயர், முதலமைச்சர் எல்லோரும் செய்தியாளர்களிடம் பேசும்போது மழைநீர் வடிகால் பணி சுமார் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக சொன்னார்கள் என்றும் இன்று வரை அந்த பணி நிறைவு பெறவில்லை என்றும் எடப்பாடி புகார் தெரிவித்தார்.
இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு மழைநீர் வடிகால் பணியை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார் என்றும் தற்போது அவர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுகின்ற பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது ஐயப்பாடாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.