வரும் 24ம் தேதியுடன் ஆம்னி பேருந்துகள் மாநகரப் பகுதிக்குள் இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனிடையே முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம், கட்டி முடிக்கும் வரை சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் கேட்டு ஆம்னி உரிமையாளர்கள் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்துதான் இயக்குவது சரியாக இருக்கும் என்றும் ஆம்னி பேருந்துகள் வேறு இடத்தில் இருந்து இயங்கினால் போட்டி ஏற்படும் சூழல் நிலவும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவில் ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், இம்மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.