உயர்கிறது பேருந்து, மின்சார கட்டணம்: சூசகமாக சொன்ன அமைச்சர் கே.என்.நேரு!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:20 IST)
பேருந்து கட்டணம் மக்கள் பாதிக்காத வகையில் உயரும் என அமைச்சர் கே என் நேரு சூசகமாக சொல்லி இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ஏற்கனவே பெட்ரோல், டீசல், காய்கறி, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், சிலிண்டர் கேஸ் அனைத்து பொருள்களும் ஏறிவிட்டது 
 
இந்த நிலையில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் மின்சார கட்டணம் உயர இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு கூறியபோது பேருந்து கட்டணம் உயர்வு குறித்து மக்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறியிருந்த நிலையில் இந்த கட்டண உயர்வு குறித்த செய்திக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் எனவே தான் விரைவில் போக்குவரத்து கட்டணம் மின் கட்டணம் உயர்த்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்