பிரதமர் மோடி கடந்த 08ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 30ஆம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுத்திருக்கிறது.
இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருகின்றனர். மேலும், உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.
சிலர், பணம் அற்ற ஏழை மக்களிடம் கொடுத்து அதை அவர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, பிறகு அதை புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், வேலூர் கோட்டையில் பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, தினசரி இரவு 8:00 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு உண்டியலை திறந்த, பக்தர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதில், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தமாக அதில் சுமார் 44 லட்சம் ரூபாய் இருந்தது. இதுவரை இந்த கோவிலில் இவ்வளவு பெரியதொகை உண்டியல் வசூல் மூலம் ஒரே நாளில் கிடைத்ததில்லை என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, கருப்புப் பணத்தை மாற்ற இயலாமல் யாரேனும் உண்டியலில் போட்டிருக்கலாம் என நிர்வாகிகள் கருதுகின்றனர்.