வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, பங்களாதேஷ் ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புயலால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஓரளவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வடக்கு ஒடிசாவை நோக்கி செல்லும் என கூறப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.