வீட்டிற்குள் வரக்கூடாது எனக் கூறிய அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (07:52 IST)
வீட்டிற்கு உள்ளே வராதே எனக் கூறிய அக்காவை, அவரது தம்பியே ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவருக்கு சரவணகுமார் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சங்கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயுடன் வசித்து வந்தார். இது சங்கீதாவின் தம்பி சரவனக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் சரவணகுமாருக்கும், சங்கீதாவுக்கும், இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் உறவினர் வீட்டில் வசித்து வந்த சரவணகுமார், தாயை பார்ப்பதற்காக தன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் அவரது தாய் இல்லை. அப்போது வீட்டில் இருந்த சங்கீதா,  வீட்டிற்குள்ளே வராதே என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணகுமார் சங்கீதாவை அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார். மேலும் அவரது பிணத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்