மணி கூலி தொழிலாளி, இவருக்கு சுகன்யா என்பவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் முடிக்கப்பட்டது. ஆனால், முதலிரவன்று மணப்பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரண்டு நாட்கள் கசித்து இவரது சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாகவும் தெரியவந்தது.
இதனிடையே சுகன்யாவிற்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததாலும், மணியின் மேல் இருந்த பயத்தினாலும் இவர் முதலிரவுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மணி வீட்டை விட்டு வெளியே சென்று தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.