காரில் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட மும்பை தொழிலதிபர்

புதன், 28 பிப்ரவரி 2018 (00:26 IST)
மும்பையில் உள்ள மெரினா பிளாசா எதிரே கார் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த 41 வயது தொழிலதிபர் ஜிகார் தாக்கூர். இவர் தனது காரில் டிரைவருடன் இன்று இரவு மணிக்கு மும்பையில் உள்ள மெரினா பிளாசா ஓட்டல் எதிரே வந்தார். பின்னர் கார் டிரைவை கீழே இறங்க சொல்லிய ஜிகார் தாக்கூர் உடனே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டுக்கொண்டார்

துப்பாக்கி சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர் உடனடியாக நேரத்தை வீணாக்காமல் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். டிரைவரின் மூலத்தையும் அவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்