பத்தே நாளில் கணவரை பறிகொடுத்த புதுப்பெண். மறுவீடு சென்ற புதுமாப்பிள்ளை மரணம்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (07:13 IST)
தூத்துக்குடி அருகே திருமணமாகி பத்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் மறுவீடு சென்ற புதுமாப்பிள்ளை சாலை விபத்து ஒன்றில் பலியான சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



 


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியுடன் மறுவீடு சென்றனர்.

பின்னர் மறுவீட்டு விருந்து முடிந்த பின்னர் இருவரும் பைக்கில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலவேசம் மரணம் அடைந்தார்.மணப்பெண் ரேவதி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான பத்தே நாட்களில் கணவரை இழந்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ரேவதிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்