மருத்துவமனையில் பணம் திருடிய சிறுவன்… சிசிடிவி காட்சி வெளீயீடு

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:02 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு சிறுவன்ன் ரூ. 20 ஆயிரம் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்தகம் உள்ளது.
இங்கு நாள்தோறும் மக்கள்  வந்து மருத்துகள் வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை இங்குப் பணியாற்றும் ஊழியர்கள் வந்து பணப்பெட்டியைத் திறந்தபோது, ரூ. 20 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, ஒரு சிறுவனம் உள்ளே நுழைந்து பணத்தைத் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனைத்தொடர்ந்து போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்