போனஸ் இல்ல… தீபாவளிக்கு லீவ் இல்ல – இவர்களும் அரசு ஊழியர்கள்தான் !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (07:31 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறையினருக்கும் மட்டும் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் காவல் துறையினருக்கு மட்டும் போனஸ் எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் சம்பளத்தில் இருந்து முன்பணமாக 10000 ரூபாய் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சரி போனஸ்தான் இல்லை என்றால் தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறையும் இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் போலிஸார்.  முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா வரும் 28, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. இதை ஒட்டி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு டியூட்டி அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்