ரஜினிக்குக் கதை சொல்ல தொடர்ந்து முயற்சி செய்யும் கார்த்திக் சுப்பராஜ்…!

vinoth

சனி, 25 அக்டோபர் 2025 (18:10 IST)
ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு படமாக நடித்து வருகிறார். அதில் வெற்றியும் தோல்வியும் அவருக்கு மாறி மாறிக் கிடைத்து வருகின்றன. ஆனால் வசூலில் அவர் படம் சோடை போகவில்லை. சமீபத்தில் அவர் நடித்த ‘கூலி’ படம் விமர்சன ரீதியாக தோற்றாலும் கூட வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து விரைவில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கிடையே சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே ரஜினிகாந்தை வைத்து ‘பேட்ட’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் ரஜினிக்கு ஒரு கதையை சொல்ல ஆர்வமாக சமீபகாலமாக அவரை பின்தொடர்ந்து வருகிறாராம். ஆனால் ஏனோ ரஜினிகாந்திடம் இருந்து இதுவரை அதற்கு சாதகமான பதில் வராததால் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்