நந்தினியின் திருமணத்தை கூட பார்க்க முடியவில்லை: தந்தை கண்ணீர் பேட்டி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (12:00 IST)
சுவாதி என்ற பெண் வெட்டி வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பு, பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி கொள்ளையனை பிடிக்க நடந்த போராட்டத்தில் ஆசிரியை ஒருவர் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 

 
நந்தினியின் பிரேத பரிசோதனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று காலை நடந்தது. பிரேத பரிசோதனை கூடத்தின் முன்பு நந்தினியின் தந்தை வடிவேல் கண்ணிருடன் நிருபர்களிடம் கூறியதாவது:
 
”நந்தினினிக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் அவளுக்கு நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் குடும்பதையே நந்தினிதான் கவனித்து வந்தாள். அவளது சம்பள பணத்தில்தான் வீட்டுச்செலவு அனைத்தும் செய்து வந்தோம். 
 
அவள் உயிரிழந்ததை எங்களால் தாங்க முடியவில்லை. எனது மகளின் திருமணத்தை பார்கக்கூட முடியவில்லையே. நந்தினி உயிரோடு இருந்திருந்தால் அவளது தம்பிக்கு நிச்சயம் வேலை வாங்கி தந்திருப்பாள். எங்களை எல்லாம் தவிக்கவிட்டு போய்விட்டாள். நிச்சயம் இதற்கு காரணமானவனுக்கு கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும்.” என்று வருத்தத்துடன் கூறினார். 
அடுத்த கட்டுரையில்