தமிழ்நாட்டில் வனத்துறை அனுமதித்த மலைப்பகுதிகளில் நடைபெற்று வந்த ட்ரெக்கி எனப்படும் மலையேற்றம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, சேலம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய மலையேற்ற பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் சுற்றுலாவை, மலையேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ட்ரெக் தமிழ்நாடு (Trek Tamilnadu) என்ற இணையதளத்தை கடந்த ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பலரும் மலையேற்றத்திற்கு விண்ணப்பித்து வனத்துறை வழிகாட்டுதல்களுடன் ட்ரெக்கிங் செய்து வருகின்றனர்.
தற்போது நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பத்தூர், கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி என 40க்கு மேற்பட்ட உடங்களில் இந்த ட்ரெக் தமிழ்நாடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதற்கிடையே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்குவதால் காட்டுத்தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் சூழல் உள்ளதால் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஏப்ரல் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரான வெயிலின் தாக்கம் மற்றும் காட்டுத்தீ சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவோ அல்லது தடை நீட்டிக்கப்படவோ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K