புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

Siva

புதன், 19 பிப்ரவரி 2025 (07:59 IST)
புதிய தேர்தல் ஆணையர் இன்று பதவியேற்க இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் தான் புதிய தலைமை தேர்தல் ஆணையர் போல் தெரிகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் என்பவர் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஞானேஷ்குமார் இன்று பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகித் கோகாலே இது குறித்து கூறிய போது, "இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் போல் தெரிகிறார்" என கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.

அவருக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், "அவருடைய திறமையின் கீழ், தேர்தல் ஆணையத்தை பாஜகவின் ஒரு பிரிவாக மாற்ற வாய்ப்பு உள்ளது" என்றும், "அவருடைய இலக்கு வெற்றி அகலமாக அடையும்" எனவும் கூறியுள்ளார். மேலும், "அவர் மீது நாடு நம்பிக்கை வைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கிண்டலான கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்