நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் இன்று பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நடிகை கவுதமி புகார் அளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில், கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? கவுதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருந்து விலகினால் அவருக்கு தேவையான உதவியை கட்சி செய்யும். கவுதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.