பா.ஜ.க வின் நிழல் ஆட்சியே அ.தி.மு.க; டி.டி.வி தினகரன் கண்டனம்

திங்கள், 5 பிப்ரவரி 2018 (08:09 IST)
தஞ்சையில் பேசிய ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் பா.ஜனதாவின் நிழல் அரசாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் கூட்டணி அணியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன். 
 
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பேசிய தினகரன், ஜெயலலிதா இருந்தபோது தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்.  தமிழகத்தை பாதிக்கக்கூடிய மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. பயிரை காக்க கர்நாடக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தருவோம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். ஆனால் தண்ணீர் தர கர்நாடக முதலமைச்சர் மறுத்துவிட்டார். ஜெயலலிதா இருந்த போது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று சட்டப்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து ஜெயலலிதா பெற்று தந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜனதாவின் நிழல் அரசாக செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
 
தமிழக மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தான் தமிழகம் முழுவதும் ஏற்படும் என்று தினகரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்