'நீட் வேண்டாம்'என்பதே அரசின் கொள்கை '- அமைச்சர் தகவல்

திங்கள், 12 ஜூலை 2021 (20:52 IST)
மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளதால் நீட் தேர்வு குறித்த அரசு உரிய அறிவிப்பு வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில்  2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இன்று நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தேர்வுக்குத்  தங்களைத் தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.

இன்று நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தேர்வுக்குத்  தங்களைத் தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில்,  நீட் தேர்வு குறித்த  வழக்கு  உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் விசாரணையின் போக்கைப் பொறுத்து தமிழக அரசு உரிய அறிவிப்பு வெளியிடும் என இன்று நீட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின்  தெளிவான கொள்கை ; நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்