தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அண்ணாமலை: என்ன காரணம்?

வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:49 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒருசில பாஜக தலைவர்களும் சற்றுமுன் சந்தித்துள்ளனர்
 
இந்த சந்திப்பின்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பேசியதாகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்