நண்பர் ரஜினியை யாராலும் அசைக்க முடியாது... எச் ராஜா!!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (12:29 IST)
நண்பர் ரஜினி நடந்த விஷயத்தை பேசியுள்ளதால், சட்ட ரீதியாக அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.  
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு... 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். 
2017 ஆம் ஆண்டு இந்துவின் அவுட்லுக் பத்திரிக்கையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என அதன் ஆதாரத்தையும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு காட்டினார். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். 
 
1971 ஆம் ஆண்டும் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம். இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. எனவே நான் இதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கமாட்டேன் என பேட்டியளித்தார்.  
இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் பாஜக நிர்வாகி கே.டி ராகவன் ஆகியோர் ரஜினியை பாராட்டியுள்ளனர். இவர்களைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இது குறித்து பேசியுள்ளார். எச்.ராஜா கூறியதாவது, நண்பர் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். அவர் அன்று பேசியது பொய்யில்லை. அன்று இந்த செயலை பெருமையாக கருதிய திகவினர் இன்று இதை மறுக்கின்றனர், அதற்குதான் ரஜினியும் இதை மறுக்காதீர்கள், மறந்திவிட்டு இனி இந்து விரோதமாக செயல்பட வேண்டாம் என புரியவைத்துள்ளார். 
 
மக்களிடத்தில் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதனால் திரும்பி பழையபடி பேசினால் திமுக திகவாக மாறிவிடும் என பயப்படுகிறார்கள்.  திமுகவினர் இறை நம்பிக்கை உடையவர்கள். அவர்களே இது போன்ற விஷயத்தை ஆதரிக்க மாட்டார்கள். நண்பர் ரஜினி நடந்த விஷயத்தை பேசியுள்ளதால், சட்ட ரீதியாக அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 
இதனோடு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, இந்த விஷயத்தில் நான் ரஜினியை ஆதரிக்க தயார். அவர் விரும்பினால் நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடவும் தயார் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்