இந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தலைக்கு மேல் லைட் வைத்து செல்பவர்களும், டயருக்கு கீழ் விழுந்து கும்பிடு போடுபவர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள் என பேசியுள்ளார். இது மறைமுகமாக அதிமுக பிரமுகர்களை தாக்கும்படி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் இப்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் நேரத்தில் ரூ.2,000-த்தை ஓட்டுக்காக வழங்குவதையே நான் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் நான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ.2,500 குறிப்பிட்டதாக தவறாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் என டிவிட்டர் பதிவு போட்டுள்ளார்.