இன்று முதல் புதிய விதி அமல்: முதன்மை ஆவணமாகிறது பிறப்புச் சான்றிதழ்கள்..!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:43 IST)
இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிறப்பு சான்றிதழ் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் வழங்குதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பிறப்புச் சான்றிதழ்கள் இனி முக்கிய  ஆவணமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிறப்பு சான்றிதழை வைத்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்