பைக்கை தூக்கி வீலிங் செய்த இளைஞர் சாக்கடையில் விழுந்து படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (11:21 IST)
பைக்கை தூக்கி வீலிங் செய்த இளைஞர் சாக்கடையில் விழுந்து படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
இளைஞர்கள் மத்தியில் பைக்கை வீலிங் செய்வது என்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. இளம் பெண்கள் முன்னிலையில் தங்கள் வீரத்தை காட்ட வேண்டும் என்று பைக் வீலிங் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது 
 
அந்த வகையில் ஈரோடு எல்ஐசி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் பைக்கில் இருந்து சறுக்கி விழுந்து சாக்கடையில் விழுந்தார்.
 
இதனையடுத்து அவர் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பைக் வீலிங் செய்த இளைஞரின் பெயர் விக்னேஷ் என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது 
 
இளைஞர்கள் தங்களது திறமையை நிரூபிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் வீலிங் செய்து ஆபத்தான வழிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுரை கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்