தமிழகத்தில் விரைவில் வர உள்ளது பைக் டாக்சி ! இளைஞர்கள் மகிழ்ச்சி

வியாழன், 3 அக்டோபர் 2019 (13:55 IST)
வெளிநாட்டில் பிரபலமாக இருந்த ஊபர், ஓலா போன்ற கால் டாக்சிகள் இந்தியாவில் கால் பதித்துள்ளது. அதனால் பெருவாரியான இளைஞர்கள் சொந்த கார்கள் வாங்கி அதை மெயிண்டெனன்ஸ் செலவு செய்வதற்க்கு பதிலாக கால் டாக்ஸிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கூட இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையில்வேலை  வாய்ப்பின்மை மற்றும் மந்தநிலை ஏற்படுவதற்கு இளைஞர்கள் வாடகை கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்துவதுதான் என கூறினார். இந்து இந்தியாவில் பெரும் பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் அநியாயமாய் ஆட்டோ, கார் டேக்ஸிகளில் வாங்கப்பட்டு வந்த  அதிகளவு கட்டணங்கள், இந்த ஓலா,ஊபர் போன்ற வாடகைக் கார்களின் வருகையால்  குறைந்தது மக்களுக்கு வசதியாய் போனது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாடகை பைக்குகள் உள்ளன. இருப்பினும் அந்த வாடகை பைக்குகளுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. எனவே சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாடகை பைக்குகளில் சென்றால், போக்குவரத்து நெரிசலான  பகுதிகளில் விரைவில் செல்ல உதவியாக இருக்கும். அதனால் இளைஞர்களு, இந்த பைக் டேக்ஸியை பயன்படுத்த வருவது பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சென்னை போன்ற மாநகரங்களில் வாடகை பைக்குள் முறையான அனுமதி பெற்று பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்