டிடிவி தினகரனா இப்படி பேசியது? வாய்ப்பில்ல ராஜா... குழப்பத்தில் அமமுகவினர்!

வியாழன், 3 அக்டோபர் 2019 (13:44 IST)
பகவத் கீதையும் திருக்குறளைப் போன்றதுதான். அதில் மதச்சாயம் பூச வேண்டாம் என டிடிவ் தினகரன் பேசி இருப்பது அவரது கட்சினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் அறிமுக செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த அறிவிப்புக்கு எதிர்பார்த்தபடியே அரசியல் கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடங்கள் விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த பாடன்களை விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்றும் தெரிவித்தார். 
 
இந்நிலையில் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், பகவத்கீதையும் திருக்குறளைப் போன்றதுதான். அதில் மதச்சாயம் பூச வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். பொதுவாக திஅன்கரன் இதுபோன்ற விஷயங்களை எதிர்ப்பவர். ஆனால், இம்முறை ஆதரவு தெரிவித்து இருப்பது வியப்பான ஒன்றாக உள்ளது. 
 
அதோடு, பெரும்பாலும், மத விவகாரங்களை பொது வெளியில் பேச தவிர்க்கும் தினகரன், இந்த விவகாரத்தில் பேசியிருப்பது, ஏன் தினகரன் இப்படி பேசினார்? என அவரது கட்சினர்களுக்கு மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்