அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் வெளியாகி படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இருந்தாலும் எவ்வளவு முயற்சித்தும் தமிழ் ராக்கர்ஸை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய கூட்டமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் தீபாவளி தினத்தை குறி வைத்து ரிலீசாகவுள்ள படங்களான கைதி, பிகில் தமிழ் ராக்கர்ஸிற்கு இரையாகவுள்ளது. இதில் கைதி படக்குழு முன்னரே, படத்தை ஆன் லைனில் இணையதளங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றமும் அப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதில் சிக்கியிருப்பது விஜய்யின் பிகில் தான். படம் வெளியான அன்றே எச்டி ப்ரிண்டில் வெளியிட்டாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.