கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் ஒரே ஒரு பிக்பாஸ் பிரபலம் இவர்தான்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:57 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும், கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் திரையுலகைச் சேர்ந்தவர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தாங்கள் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவருக்காக உயிரையும் கொடுப்போம் என்றும் வசனம் பேசியவர்கள் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடும் நிலையில் ஒருவர் கூட தேர்தல் பிரசாரத்திற்கு அவருக்கு ஆதரவாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பர்களில் ஒருவரும், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். கையில் டார்ச் லைட் உடன் அவர் நடந்தே சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்