நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி என்ற சின்னம் இந்த முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய இக்கட்சியின் தலைவர் ஜெயக்குமார் என்பவர் நாங்கள் கட்சி தொடங்கி மூன்று மாதங்களே ஆனபோதிலும் தமிழக மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுமானால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம், அவ்வாறு போட்டியிட்டால் அவருக்கும் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்