விவாசாயிகள் பெயரில் ரூ.5,400 கோடி கடன்: வங்கிகளை ஏமாற்றிய பலே தொழிலதிபர்!

புதன், 18 ஜூலை 2018 (16:14 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் போலி ஆவணங்களை தயார் செய்து விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.5,700 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலம் பார்பானி மாவட்டத்தில் காங்கேட் சர்க்கரை மற்றும் எரிசக்தி லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ரத்னாகர் கட்டே. அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இவரது சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்துள்ளனர். 
 
இந்நிலையில் இவரது நிறுவனத்திற்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் பலருக்கு வங்கிகளில் இருந்து கடனை வட்டித்தொகையுன் திருப்பிசெலுத்தும்படி நோட்டீஸ் வந்துள்ளது. 
 
இதை பார்த்து வங்கிக்கு சென்று விசாரணை செய்ததில் சுமார் 600 விவசாயிகள் பெயரில் பயிர் அறுவடை மற்றும் போக்குவரத்து திட்டம் என்ற பெயரில் ரத்னாகரின் நிறுவனம் கடன் வாங்கியுள்ளது தெரியவந்தது. 
 
மேலும், விவசாயிகள் பெயரில் போலியாக கடன் பெறுவதற்காக 22 போலி நிறுவனங்களையும் இவர் நடத்தி வந்துள்ளார். எனவே, இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்