தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும்,வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும் என தெரிவித்தார்.கடந்த பத்து நாட்களாக வருவாய் துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருவதால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.