அரசியலில் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை: ஜோதிமணி எம்பி அதிருப்தி..!

Siva

வெள்ளி, 8 மார்ச் 2024 (13:04 IST)
அரசியலில் பெண்களின் உழைப்பு மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பெண்கள் ஏராளமான தடைகள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்கின்றனர் என்றும் ஆனால் அரசியல் கட்சிகள் பெண்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் 
 
அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பை பெயர் அளவில் தான் இருக்க விரும்புகின்றனர் என்றும் எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைதான் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு  கொண்டு வந்ததன் மூலம் தான் அரசியலில் பெண்கள் பங்களிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்தார் 
 
ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரசியலில் பெண்களுக்கான இடம் என்பது அதிருப்தி தான் என்று அவர் கூறியுள்ளார். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்