மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை: கதறும் வங்கி ஊழியர்கள்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (17:14 IST)
மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஐம்பது நாட்களில் என்ன மாதிரியான முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



 

 
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:-
 
நமது நாட்டில் பணப்பரிவர்த்தனைதான் பிரதானம். இதன் காரணமாக கறுப்புப் பணம் பதுக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதை ஒழிப்பதற்காகவே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க மக்களோடு இணைந்து மத்திய அரசு ஒரு போரை தொடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 
கடந்த ஐம்பது நாட்களில் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் சிரமங்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, என்றார் கூறினார்.
 
மேலும் இந்த 50 நாட்கள் மற்றும் ஏடிஎம் மையங்கள் குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-
 
ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், புதிய இந்தியா மலரப் போகிறது என்றார்கள். வங்கிக்குள் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்புப் பணம் வந்துவிட்டதா? அதைப் பற்றி இவர்கள் பேசவில்லை. மக்களிடம் புழக்கத்தில் இருந்த, 14 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்குள் வந்துவிட்டது என்கிறார்கள்.
 
எந்த் அளவுக்கு கறுப்பு பணம் இருந்தது என்பது பற்றியும், கள்ளப் பணம் ஒழிக்கபட்டது பற்றியும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். லஞ்ச லாவண்யம் குறையும் என்பதை எந்த ஆவணத்தின் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள். விலைவாசி குறையும் என்று சொல்லிக் கொண்டே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இதன்மூலம் விலைவாசி குறையாது என்பது தெளிவாக தெரிகிறது.
 
வங்கிகளில் தினம் தினம் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்லியே ஒய்ந்துவிட்டோம், என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்