பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ஆய்வுக்கு அனுமதி! தமிழகத்தின் கோரிக்கைக்கு பலன்..!

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (10:00 IST)
பெங்களூர் - ஓசூர் மெட்ரோ திட்டத்திற்கு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒரு சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் சேவை நீடிக்க நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. பெங்களூரில் இருந்து ஓசூர் வரையிலான மெட்ரோ ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆய்வுக்காக 75 லட்சத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பொம்மச்சந்திராவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் நீடித்தால் பெங்களூரில் இருந்து ஓசூர் வரும் தமிழக பயணிகளும் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக பயணிகளும் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிட த்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்