சென்னை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்குமா? தெற்கு ரயில்வே விளக்கம்..!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:49 IST)
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்கும் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்திக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் பல நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இந்த ரயில்களூக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி காட்பாடி பெங்களூரு ஆகிய இரண்டு ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும் என செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன
 
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்ததற்கு ரயில்வே பாரத் ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என்றும் திருவள்ளூரில் நிற்காது என்றும் கூறியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்