கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கடந்து செல்லும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என்று தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து இயக்க அனுமதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள், ஓட்டுனரின் பதிவு சான்றிதழை பரிசோதனை செய்து கொள்ளலாம். பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்கினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.