திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை- முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவிப்பு

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (14:00 IST)
சமீபத்தில், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வென்று ஆட்சியமைத்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் மிசோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஜகதீஸ் தேவதா மற்றும் ராஜேந்திரா சிக்லா ஆகியோர் பதவியேற்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள திறந்தவெளியில் இறைச்சிக் கடைகள் நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிப்பதாக முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பொதுமக்கள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்