பஞ்சு மிட்டாய்க்கு தடை...! ரசாயனம் கலக்காத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனையில் இறங்கிய வியாபாரிகள்!

Prasanth Karthick

ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (09:02 IST)
பஞ்சு மிட்டாயில் நிறமூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களில் ஆபத்தான ரசாயனம் உள்ளதாக பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ரசாயனம் கலக்காத வெள்ளை பஞ்சு மிட்டாயை சில பகுதிகளில் விற்க தொடங்கியுள்ளனர்.



சமீபத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களில் நிறமேற்றுவதற்காக பயன்படுத்தும் ரசாயனத்தில் ரோக்டமைந்பி என்ற உடலுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து முதலில் புதுச்சேரி, சென்னை பகுதிகளில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தமிழகம் முழுவதுமே பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சுமிட்டாயை பிங்க் நிறத்தில் கொண்டு வர சேர்க்கப்படும் ரசாயனத்தை தவிர்த்து வெள்ளை நிற பஞ்சு மிட்டாயை விற்க தொடங்கியுள்ளனர் சில வியாபாரிகள். ஆனால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெள்ளை பஞ்சு மிட்டாய்க்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இந்த வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான ரசாயனம் இல்லை என நிரூபிக்கப்பட்டால் வெள்ளை பஞ்சு மிட்டாய்க்கு அனுமதி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்