பாதுகாவலர் மடியில் படுத்திருந்த குட்டி யானை : வைரல் வீடியோ
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:39 IST)
தாய்லாந்து நாட்டில் புவன் கன் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தில் ஏராளமான யானைகள் வலம் வருகின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு யானை இந்தக் காட்டில் தனித்துவிடப்பட்டது. இந்த யானையை மீட்ட வனத்துறையினர் 5 மாதங்களாக தங்களுடன் வைத்துப் பாசமாக வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி அன்று யானையை வனத்துறையினர் மீண்டும் வனத்தில் விட்டனர்.ஆனால் இந்த யானை தனது கூட்டத்தை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் தனித்து நின்றது.
அதைக் கண்ட வனத்துறையினர் யானையை மீட்டு, வனப்பராமரிப்பு மையத்துக்கு கொண்டு வந்தனர். அப்பொழுது, தன்னைப் பராமரித்து ஒரு பராமரிபாளரின் மடியில் படுத்து கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.