ஆவின் பால் புதிய விலை பட்டியல் வெளியீடு

Webdunia
சனி, 8 மே 2021 (21:29 IST)
திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி  ஏற்றுக்கொண்டனர்.

இன்று பதவியேற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ஒன்றான் ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் என தனது ஆணையில் கையெழுத்திட்டார்.


அதன்படி, பால் ஒரு லிட்டர் விலை ரூ. 43 லிருந்து ரூ. 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மே 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் குறித்த புதிய பட்டியல் அமலுக்குவரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40( பழைய விலை ரூ.43. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.20 ( பழைய விலை ரூ.21.25, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.22 ( பழைய விலை ரூ.23.50)  நிறைய கொழுப்பு பால் ரூ.24, ( பழைய விலை ரூ.25.50 , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.18.50 பழைய விலை( ரூ.20 ,  டீமேட் ரூ.57,  பழைய விலை ரூ.60ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்