தைப்பொங்கல் திருநாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1100 காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 13 சுற்றுகள் நடைபெற்றன. மாலை 6:00 மணி அளவில் போட்டிகள் முடிவடைந்தன. 19 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்து, அவருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கிய மற்றொரு வீரருக்கு ஹோண்டா சைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டின் சிறந்த காளையாக சசிகலா வளர்த்த காளை தேர்வு செய்யப்பட்டது. அதற்காக அவருக்கு 10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக கிடைத்தது. சசிகலாவின் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.