பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு கட்டண விரிவாக்க பட்டியலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிவிப்பின்படி குறைந்த கட்டணமாக 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணம் ஆகும் என்றும் காத்திருப்பு கட்டணத்திற்கு நிமிடத்திற்கு 1 ரூபாய் 50 காசு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகல் நேர கட்டணத்தில் இருந்து 50% அதிகம் வசூலிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஆட்டோ கட்டணங்களின் விவரங்கள் பின்வருமாறு
2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும். 3 கி.மீ.க்கு ரூ.72, 4 கி.மீ.க்கு ரூ.90, 5 கி.மீ.க்கு ரூ.108, 6 கி.மீ.க்கு ரூ.126, 7 கி.மீ.க்கு ரூ.144, 8 கி.மீ.க்கு ரூ.162, 9 கி.மீ.க்கு ரூ.180, 10 கி.மீ.க்கு ரூ.198 கட்டணம் ஆகும்.