''பீஸ்ட்'' திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:55 IST)
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம்    இன்று வெளியான நிலையில் தியேட்டரில் ரசிகர்களிடையே மோதம் ஏற்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா,  டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் – விஜய் இணைந்துள்ள  பீஸ்ட் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் வடுகநாதன் திரையரங்கில் 3 மணி காட்சிக்கு ரசிகர்கள் வந்தனர்.

அப்போது மயிலாடுதுறை,  நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 இளைஞர்கள் விஜய் ரசிகர்கள்  படம் பார்க்க வந்துள்ளனர்.

அவர்கள் மது அருந்தி வந்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.  பின்னர்,  விஜய் ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்,  விஜய் ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

போலிஸார் கண் முன் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்