பல்கலைக்கழகத்தில்....திருக்குறள் பாடமாகிறது....

சனி, 19 ஜூன் 2021 (15:37 IST)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் வான்புகழ் படைத்த திருக்குறளைப் இயற்றினார்.

இரு அடி ஏழு சீரில் மொத்தமுள்ள 1330 திருக்குறளில் அறம், பொருள், இன்பம் உள்ளிட்ட மூன்று அதிகாரங்களில் அனைத்திற்குமான கருத்துகள் பொதிந்துள்ளது.

இத்தகைய அர்த்தம் உள்ள திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்யவுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை இன்று துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். நடப்புக் கல்வியாண்டில்  தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்