ஆல்பாஸ் செய்யப்பட்ட அரியர் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு: சென்னை பல்கலை அதிரடி!

புதன், 16 டிசம்பர் 2020 (07:00 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே
 
அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கும் பாஸ் என அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் ஆல்பாஸ் செய்யப்பட்ட அரியர் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் எழுத வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
ஆல்பாஸ் செய்யப்பட்ட நடவடிக்கைகளை ஏற்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மன்றத்தில் நடந்த வழக்கில் யுஜிசி தெரிவித்தது. இதனை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்கள், தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில் வரும் 21ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது
 
ஆன்லைனில் நடத்தப்படும் இந்த தேர்வு குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கல்லூரி நிர்வாகிகளுக்கு பேராசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. இதனால் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்