எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அதிகார பகிர்வு வேண்டும்.. திமுகவுடன் பேசிய பின் திருமாவளவன் பேட்டி..!

Siva

திங்கள், 2 மார்ச் 2026 (16:02 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு சராசரியான தேர்தல் அல்ல என்றும், வலதுசாரி சக்திகளை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
 
தங்கள் கட்சி திமுகவுடன் பேரம் பேசவில்லை என்றும், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே சமூக நீதிக்கு கிடைக்கும் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அதிகார பகிர்வு அமைய வேண்டும்" என்ற கோரிக்கையை மனம் திறந்து முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். விசிகவின் கருத்துகளை கேட்டுக்கொண்ட திமுக குழுவினர், முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமான முறையில் அமைந்ததாக திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்